வகிபாகம்
கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு சூழல் அமைச்சின் கீழ் 2016ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இந்தப் பிரிவின் முதன்மை வகிபாகம், சுய சூழல் பொறுப்புகளை உருவாக்குமுகமாக சூழல் மற்றும் இயற்கை வளங்கள் என்பவற்றை நிலைபேறாக முகாமைப்படுத்துவது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதலாகும். அது பின்வருமாறு அமைகிறது
- சூழல்பற்றிய விழிப்புணர்வு மற்றும் மேம்படுத்தல் என்பவற்றிற்கான மூலோபாயத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்தல், அவற்றை செயற்படுத்துதல் மற்றும் காலத்திற்குக் காலம் தேவையான மாற்றங்களைச் செய்தல்.
- சூழலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வை நாடளாவிய ரீதியில் உருவாக்குவதற்கு பாடசாலைகள், அரசாங்க முகவர் நிலையங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.
- பாடசாலை பிள்ளைகள், சூழலியல் முன்னோடிகள். ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் அமைப்புகளின் அங்கத்தினர்கள், அரசாங்க அதிகாரிகள், சூழலியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சூழல்பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கு வசதிப்படுத்துதல்.
- உலக சுற்றாடல் தினத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளை இணைப்பாக்கம் செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
- சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தொனிப் பொருள் மற்றும் சூழலியல் ரீதியாக கூர்; உணர்வு மிக்க விடயங்கள் தொடர்பாக வெளியீடுகளை ஆரம்பித்தல்.
- அமைச்சு மற்றும் அதனோடு இணைந்துள்ள நிறுவனங்களின் வெளியீடுகளின் தரத்தைப் பேணுவதற்காக தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்.
- இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக சூழல் பாதுகாப்பு ஊடக ஆதரவு தேடல்களைத் தயாரித்தல் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டுதல்.
பிரிவுக்கு ஏற்புடையதான விசேட திகதிகள்
"உலக சூழல் தினம் - யூன் 05"
உலக சூழல் தினம் ஒவ்வொரு வருடமும் யூன் 5ஆம் திகதி, கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைமையில் மற்றும் இணைப்பாக்கத்தின் கீழ் கொண்டாடப்படுகின்றது. இந்த நிகழ்வைக் குறிக்குமுகமாக, தனியார் கல்வி நிறுவகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றுடன் சேர்த்து இலங்கையின் அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கு சனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்தில் ஒரு சுற்றறிக்கை வழங்கப்படும்.
இந்தப் பிரிவின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள்
- சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் தகவல்களையும் வழங்குதல்
- பாடசாலை நூலகங்களுக்காகவும் பல்கலைக் கழகங்களுக்காகவும் சூழல் வெளியீடுகளை வழங்குதல்
- அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக புதிய சூழல் தகவல்கள் மற்றும் வெளியீடுகள் பற்றி அறிவூட்டுதல்
- ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு சூழல் தகவல்களை வழங்கும் நிலையாமாக செயலாற்றுதல்
எமது அணி
![]() பணிப்பாளர் |
![]() உதவிப் பணிப்பாளர் |
![]() உதவிப் பணிப்பாளர் |
![]() |
![]() |