செயற்பாகள்
- காணி மற்றும் கனிய வளங்கள் பற்றிய கொள்கை முன்னெடுப்புகளையும் அரசாங்க மறுசீரமைப்பையும் வினைத்திறன் மிக்க வகையில் நிறைவேற்றுதல்.
- சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு விட்டுக்கொடுக்கும்படி சமரசப்படுத்தாமல் எமது பங்காளர்களுக்கு சிறந்த நிர்வாக மற்றும் வசதிப்படுத்தும் சேவைகளை வழங்குதல்.
- காணி தரம் குறைதலின் பாதகமான தாக்கங்களை மாற்றியமைத்தல்
- காணி தரம் குன்றுவதைக் குறைப்பதற்கு தேசிய செயற் திட்டத்தை (NAP) செயற்படுத்துதல்.
- காணி தரம் குறைதல் மற்றும் நிலைபேறான காணி முகாமைத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்து குழு விடயங்கள்.
- இலங்கையில் காணி தரங்குறைதல் பற்றிய தேசிய அறிக்கையை தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்துதல்.
- இலங்கையில் காணி தரங் குறைதல், கைவிடப்படுதல், நிலைபேறான காணி வள முகாமைத்துவம் என்பவற்றிற்காக தரவுத்தளம் ஒன்றைப் பேணுவது தொர்பான நடவடிக்கைகள் என்பவற்றுடன் செயலமர்வுகள் மற்றும் அதுபற்றி விழிப்புணர்வூட்டல்.
- உலக காணி கைவிடப்படல் தின ஞாபகார்த்த தின செயற்பாடுகளை ஒழுங்கு செய்தல்.
- நிலைபேறான காணி முகாமைத்துவத்துடன் தொடர்புடைய கருத்திட்டங்களை இணைப்பாக்கம் செய்தல்.
- காணி கைவிடப்படுதலை நீக்கும் சமவாயத்தை செயற்படுத்துதல் பற்றிய ஐக்கிய நாடுகள் செயலகத்துடனும் ஏனைய முகவர் நிலையங்களுடனும் இணைப்பாக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் அதன் பயன்கள் நாட்டுக்கு கிடைத்தல்.
- காணி வளங்கள் மற்றும் காணி தரங் குறைவதைத் தடுத்தல், திறன் விருத்தி மற்றும் நிதியிடல் என்பவை பற்றி அனைத்து தரப்பினரின் விழிப்புணர்வை உயர்த்துதல்.
- கனிய வளங்களை முகாமைப்படுத்துதல், கட்டளைச் சட்டங்கள், சுற்றறிக்கைகள் மற்றும் கொள்கைகள் என்பவற்றைக் கையாள்தல்.
- நிர்மாண பணிகளுக்காகப் பயன்படுத்துகின்ற மணல், கருங்கல், சரளைக்கல் மற்றும் களிமண் போன்வற்றிற்காக அமைச்சிடம் கோரிக்கை விடுத்தல் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்தல்.
- கனிய வள அபிவிருத்தியுடன் தொடர்புடைய திட்ட முன்மொழிவுகளைக் கையாள்தல்.
- கனிய பொருள்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக அமைச்சரவை அமைச்சர்களால் நியமிக்கப்பட்ட குழுக்களுடன் இணைப்பாக்கம் செய்தல் மற்றும் கனிய பொருள் சட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்.
- கனிய முதலீட்டு உடன்படிக்கைகள் - அனுமதிப்பத்திரம் அளிக்கும் நடவடிக்கைகள் என்பவற்றுடன் தொடர்புடைய செயற்பாடுகள்.
- இலங்கையில் கனிப் பொருட்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல், அவற்றை தொகை ரீதியாகப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் அவற்றின் பொருளாதார பெறுமதியைக் கணிப்பிடல்.
- கனிய வளங்களுடன் தொடர்புடைய கருத்திட்டங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் சம்பந்தமான சூழல் அழுத்த மதிப்பீட்டு நடவடிக்கைகள்.
- இலங்கையில் கண்டறியப்பட்ட கனிப் பொருட்களுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட சாத்தியக்கூற்று ஆய்வுகளை நடத்துதல், தகுந்த சந்தை தகவல்களைச் சேகரித்தல் மற்றும் தேசிய உற்பத்தி நடவடிக்கை முறைக்கு அவற்றின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு அவற்றின் நிலைபேறான பயன்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுத்தல்.
எமது அணி
![]() பணிப்பாளர் |
![]() உதவி பணிப்பாளர் |
![]() உதவி பணிப்பாளர் |