small gov

உயிர்பாதுகாப்பு பற்றிய கார்ட்டஜினா உடன்படிக்கைக்கு அமைவாக (தேசிய உயிர்பாதுகாப்பு கருத்திட்டம்) தேசிய உயிர்பாதுகாப்பு சட்டகத்தின் கருத்திட்டம் செயற்படுகிறது

உயிர்பாதுகாப்பு பற்றிய கார்ட்டஜினா உடன்படிக்கைக்கு அமைவாக செயற்படுகிற தேசிய உயிர்பாதுகாப்பு சட்டகத்தின் கருத்திட்டம் புநுகு நிதியுதவி அளிக்கின்ற கருத்திட்டமாகும். இது 2017ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக சூழல் அமைச்சினால் அமுல்படுத்தப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் நோக்கம் இலங்கையின் கார்ட்டஜினா உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதற்கு தேசிய உயிர்பாதுகாப்பு சட்டகத்தை வினைத்திறன்மிக்க வகையில் அமுல்படுத்துவதற்காக ஒழுங்குமுறைப்படுத்தல், நிறுவன மற்றும் தொழில்நுட்ப கொள்ளளவு என்பவற்றைப் பலப்படுத்துவதாகும். இந்தக் கருத்திட்டத்தை நிறைவேற்றும் தேசிய நிறைவேற்றல் முகவர் நிலையமாக (NEA) அமைச்சின் உயிர்பலவகைமை பிரிவு திகழ்கிறது. இந்தக் கருத்திட்டம் 1) பலப்படுத்தும் கொள்கை, நிறுவக, மற்றும் உயிர்பாதுகாப்புக்காக ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டகம் 2) இடர் மதிப்பீட்டு முறைமை (RA), இடர் முகாமைத்துவம் (RM) மற்றும் இடர் தொடர்பாடல் (RC) என்பவற்றை மேம்படுத்துதல் 3) உயிர்வாழும் சீர்படுத்தப்பட்ட மரபணுக்களை (LMOs) கண்டுபிடித்தல் மற்றும் அடையாளம் காணுதல் என்பவற்றிற்கான தொழில்நுடப கொள்ளளவை விருத்தி செய்தல் மற்றும் உயிர்பாதுகாப்புடன் தொடர்புடைய உட்கட்டமைப்பைப் பலப்படுத்துதல் 4) அறிவு விருத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுதல், கல்வி மற்றும் பங்கேற்பு.