உயிர்பல்வகைமைக்கான சர்வதேச தின கொண்டாட்டம் - மே 22
ஒவ்வொரு வருடமும் மே 22ஆம் திகதி மக்களுக்கு உயிர் பல்வகைமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றிய செய்தியுடன் உயிரியல் பல்வகைமை சமவாயத்தினால் சர்வதேச உயிர்பல்வகைமை தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தைக் நினைவுகூர்வதற்காக பல்வேறு தொனிப்பொருள்களின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்படுகின்றன.
கண்டல்தாவர இயற்கை முறைமையின் பாதுகாப்புக்காக சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. - யூலை 26
கண்டல் தாவர இயற்கை முறைமையின் பாதுகாப்புக்கான சர்வதேச தினம் 2015ஆம் ஆண்டு யுனெஸ்கோ பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் "ஒரேவிதமான, சிறப்பான மற்றும் வடுபடக்கூடிய சூழல் முறைமை" என்ற வகையில் கண்டல் தாவர சூழல் முறைமையின் முக்கியத்துவத்தைப்பற்றிய விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கிலும் அவற்றின் நிலைபேறான முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பயன்பாடு என்பவற்றிற்கான தீர்வுகளை மேம்படுத்துவதற்கும் ஒவ்வொரு வருடமும் யூலை 26ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது
அதற்கு அமைவாக சூழல் அமைச்சின் உயிர்பல்வகைமை பிரிவு பங்கீடுபாட்டாளர்களுடன் கூட்டிணைந்து ஒவ்வொரு வருடமும் கண்டல்தாவர சூழல் முறைமையைப் பாதுகாப்பதற்காக சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதற்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
சர்வதேச மலை தினத்தைக் கொண்டாடுதல் - டிசம்பர் 11
மலை என்பது மிகவும் முக்கியமான வளமாகும். ஏனெனில் இது மிகவும் மகிழ்ச்சியூட்டக்கூடிய நிலத் தொகுதியாகும். இது மிகவும் உயர்ந்த உயிர்பல்வகைமையைக் கொண்டிருப்பதோடு கலாசார விழுமியங்களையும் இயற்கை முறைமை சேவைகளையும் வழங்குவதால் முக்கியத்துவம் பெறுகிறது. உலகில் 25% நிலப்பகுதி உயிர்பல்வகைமைகளையும் 50% உயிர்பல்வகைமை இடங்களை மலைப்பகுதி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உலக சனத் தொகையில் 15% க்கு மலைகள் வீடுகளாக இருக்கின்றன அத்துடன் உலக நிலப்பகுதியில் கால்பகுதியில் விலங்குகளும் தாவரங்களும் இருக்கின்றன. நோயுள்ள இனங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. அத்துடன் பல்வகைமை இனங்களும் மலைகளை உறைவிடமாகக் கொண்டுள்ள பல்வகைமைகளும் மிக உயர்வாக இருக்கின்றன. பல்வேறு சமூகங்கள், கலாசாரங்கள் மற்றும் சூழலியல் அறிவு என்பவற்றைக் காண முடிகிறது. நிலைபேறான அபிவிருத்திக்கு அவைகளின் பாதுகாப்பு பிரதான காரணியாக இருக்கின்றது. அத்துடன் அது SDGயின் இலக்கு 15இன் ஒரு பகுதியாக இருக்கின்றது. மலை உயர்பல்வகைமை குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும். ஏனெனில் வித்தியாசமான காலநிலை வலயங்களை மலைப் பிராந்தியத்தல் காண முடியும். வித்தியாசமான இட அமைப்பியல் வித்தியாசமான சூழல் முறைமைகளை உருவாக்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக மலைகள் காலநிலை மாற்றம், அளவுக்குமீறிய சுரண்டல், நிலத்தின் தரம் குறைதல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
மலைகளின் முக்கியத்துவத்திற்கு செலுத்தப்படும் கவனம் அதிகரித்ததால் 2002ஆம் ஆண்டு ஐநா சர்வதேச மலைகள் தினத்தைப் பிரகடனப்படுத்தியது. 2003ஆம் ஆண்டிலிருந்து CBD அங்கத்துவ நாடுகளால் இந்த ஞாபகார்த்த தினம் கொண்டாடப்பட்டது.