small gov

அமைச்சின் கணக்கு பிரிவு நிதி மற்றும் கொடுப்பனவுகள் மற்றும் விலைமனுகோரல் மற்றும் களஞ்சிய முகாமைத்துவம் ஆகிய இரண்டு செயற்பாடுகளைக் கொண்டுள்ளது. இதில் வருடாந்த வரவு செலவு திட்டத்தையும் வருடாந்த கணக்குளையும் தயாரித்தல், முன் பண கணக்குத் தேவைகைளை நிறைவுசெய்தல், திறைசேரியுடன் இணைப்பாக்கம் செய்தல் மற்றும் அமைச்சின் நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து கொடுப்பனவுகள் என்பவையும் இதில் உள்ளடங்குகின்றது. விலைமனுகோரல் மற்றும் களஞ்சிய முகாமைத்துவம் என்ற விடயங்களைப் பொறுத்த வரையில், அனைத்து விலைமனுகோரல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுதல், அத்தகைய நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் அமைச்சுக்கு எழுதும் உபகரணங்களையும் ஏனைய நுகர்வு பொருட்களையும் தங்குதடையின்றி வழங்கல் என்பவையும் உள்ளடங்குகின்றன. இவற்றை விட, கணக்கு பிரிவு பின்வரும் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருக்கின்றது.

கணக்கு பிரிவின் செயற்பாடுகள்

  • காற்று தர முகாமைத்துவத்தை இணைப்பாக்கம் செய்தல் மற்றும் மூலோபாய முகாமைத்துவத்திற்கான நிறுவன ரீதியான சட்டகம்.
  • அசையா மூலங்களிலிருந்து காற்று வெளியேற்றத்தை வினைத்திறன் மிக்க வகையில் முகாமைப்படுத்துவதற்கு கொள்கைகளைத் தயாரித்தல்.
  • உள்ளக காற்று தர முகாமைத்துவம் தொடர்பான கொள்கைகளைத் தயாரித்தல்.
  • வளி மாசடைவதற்குப் பங்களிப்புச் செய்கின்ற நெறிமுறையற்ற மற்றும் கவனமற்ற செயற்பாடுகளை முகாமைப்படுத்துதல்.
  • தூய்மை தொழில்நுட்பம், எரிபொருள் மற்றும் நடவடிக்கைமுறைகளை அறிமுகப்படுத்துதல்.
  • காற்று தரத்தை கண்காணிப்பது பற்றிய கொள்கைகளை உருவாக்குதல்.
  • காற்று தரத்தை மேம்படுத்துவதற்காக விழிப்புணர்வூட்டல், கல்வி, தகவல் மற்றும் அறிவு என்பவற்றை முகாமைப்படுத்துவதற்கான மூலோபாயங்களை விருத்தி செய்தல்.
  • வளி மாசடைதலில் ஆராய்ச்சி, அபிவிருத்தி என்பவற்றைப் பேணுதல் மற்றும் அழுத்தங்களை மதிப்பீடு செய்தல்.
  • வினைத்திறன் மிக்க காற்று தர முகாமைத்துவத்திற்காக மனித வளங்களையும் தகவல் அறிவையும் அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி.
  • காற்று தர முகாமைத்துவத்திற்காக உலக பங்கேற்பும் கூட்டொருமைப்பாடும்.
  • காற்று தர முகாமைத்துவத்திற்காக நிலைபேறான நிதியிடல் பொறிமுறையை உறுதிப்படுத்துதல்.

எமது அணி

g dumyதிருமதி டி.ஏ. ஹிமாலி எல். சேனவிரத்ன 
பிரதம கணக்காளர்

Dilrukshiதிருமதி. கே.எச்.என்.ஜி. தில்ருக்ஷி
கணக்காளர் (கொடுப்பனவு)

திரு. ஜே.எம்.பி.ஆர். ஜயசேகர
கணக்காளர் (வழங்கல்)