உயிர்பாதுகாப்புபற்றிய தேசிய கொள்கை
தற்கால மற்றும் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக நிலைபேறான அபிவிருத்தியின் ஒட்டுமொத்த சட்டகத்துக்குள் முன்னெச்சரிக்கை கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன உயிரியல் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதில் போதியளவு மட்டத்தை உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் ஈடுபாட்டைப் புதுப்பிப்பதற்கு உயிரியல்பாதுகாப்பு தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டது. அமைச்சரவை அமைச்சர்கள் 2005ஆம் ஆண்டு இந்தக் கொள்கையை அங்கீகரித்தனர்.
இலங்கையில் தொல்லை கொடுக்கும் வேற்று உயிரினங்கள் (IAS) பற்றிய தேசிய கொள்கை, மூலோபாயம் மற்றும் செயற் திட்டம்
இலங்கையின் தொல்லை கொடுக்கும் வேற்று உயிரினங்கள் (IAS) உயிரியல் பல்வகைமையையும் உணவுப் பாதுகாப்பையும் பாதித்து இயற்கைக்கும் கமநல- சூழல் முமைக்கும் பாரிய அச்சுத்தலாக இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக இலங்கையின் தொல்லை கொடுக்கும் வேற்று உயிரினங்கள் (IAS) பற்றிய தேசிய கொள்கை, மூலோபாயம் மற்றும்; செயற் திட்டம் வழி காட்டும் விளக்காக செயற்படுகிறது. இந்த செயல்நோக்கு மற்றும் நீண்டகால இலக்கு என்பவை தொல்லை கொடுக்கும் வேற்று உயிரினங்கள் (IAS) இடரை இலங்கையில் IAS துறை ஊடாக குறைப்பதில் செயலாற்றுகின்ற அரசு மற்றும் ஏனைய பங்கீடுபாட்டாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு தேவைப்படுகிறது.
சரியான சட்ட சட்டகத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டுகிற தேசிய கொள்கையை ஸ்தாபிப்பது பிரதான நோக்கமாகும். அத்துடன் சமூகத்திற்கு, சூழலுக்கு, பொருளாதாரத்திற்கு தொல்லை கொடுக்கும் வேற்று உயிரினங்களின் (IAS) இடரை தடுப்பதற்கு, கண்டறிவதற்கு பதிலளிப்பதற்கு மற்றும் சமாளிப்பதற்கு வினத்திறன்மிக்கதும் பயனுறுதி மிக்கதுமான நிறுவன இணைப்பாக்க பொறிமுறையின் ஊடாக இதை ஸ்தாபிப்பது முக்கியமானதாகும்.
அதன் அமுலாக்கத்திற்கான கொள்கை மற்றும் மூலோபாயமும் செயற்பாட்டு திட்டமும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது.
இலங்கையில் கண்டல் தாவர இயற்கை முறைமையைப் பாதுகாப்பது மற்றும் நிலைபேறாகப் பயன்படுத்துதல் பற்றிய தேசிய கொள்கை
The National Policy for conservation and Sustainable Utilization of Mangrove Ecosystems in Sri Lanka prepared and approved by the Cabinet of Ministers in January 2020.
இலங்கையில் கண்டல் தாவர இயற்கை முறைமையைப் பாதுகாப்பது மற்றும் நிலைபேறாகப் பயன்படுத்துதல் பற்றிய தேசிய கொள்கை 4 கொள்கை இலக்குகளையும் ஆறு மூலோபாயங்களுடன் 19 கூற்றுகளையும் கொண்டுள்ளது. கண்டல் தாவர முறைமை சம்பந்தமாக நேரடியாக அல்லது மறைமுகமாக வேலை செய்கின்ற அனைத்து அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் வகிபாகங்கள், செயற்பாடுகள், மூலோபாயங்கள், நோக்கங்கள், இலக்குகள் மற்றும் ஒழுங்குவிதிகள் என்பவற்றிற்கு இந்தக் கொள்கை வழிகாட்டி பலப்படுத்தும். இலங்கையில் கண்டல் தாவர இயற்கை முறைமையைப் பாதுகாப்பது மற்றும் நிலைபேறாகப் பயன்படுத்துதல் பற்றிய தேசிய கொள்கை ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட கண்டல் தாவர உறைவிடங்கள் மற்றும் பாதுகாக்கப்படாத பகுதிகளில் உள்ள கண்டல் தாவர இயற்கை முறைமை தொடர்பாக பணியாற்றுகின்ற பங்கீடுபாட்டாளர்களும் முகவர் நிலையங்களும் இக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.