small gov

இன்றைய கால கட்டத்தில் வாழ்கின்ற இலங்கையர்களான நாம் பாரிய சமூக மாற்ற யுகத்தை எதிர்நோக்கியுள்ளோம். உற்பத்தியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் எம் அனைவரினதும் தீர்மானமிக்க மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டிய சவாலாக காணப்படுகின்றது. நாட்டிலுள்ள இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்திய வண்ணம், பாதுகாப்பு உத்திகள் தொடர்பான பொறுப்புடைமையை சிரமேற்கொண்டு செயற்படுதல் எமக்குக் கையளிக்கப்பட்டுள்ள மா பெரும் பொறுப்பாகக் காணப்படுகின்றது. அரச துறை, தனியார் துறை, அரச சார்பற்ற இயக்கங்கள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் கூட்டிணைந்து செயற்பட்ட வண்ணம் அபிவிருத்தி சார்ந்த மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள், முடிவுகள், தீர்மானங்களுக்கு வருவது எமது பொறுப்பாகக் காணப்படுகின்றது.

பொருளாதாரத்தை சுற்று வட்ட பொருளாதாரமாக மாற்றும் பொருட்டு வலுச் சக்தி துறையை புதுப்பிக்கத்தக்க வலுச் சக்தியின் கீழான துறையாக மாற்றீடு செய்வதற்கும், நிர்மாணிப்புத் துறையை பசுமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பயன்தகு செயன் முறை உள்ளடக்கியதாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், சமாந்தர நிலையிலான அமைச்சுக்கள் மற்றும் அவற்றுடன் கூட்டிணைந்த நிறுவனங்களிடையே மிகச் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்திய வண்ணம் சாதகமான பிரவேசிப்புடன் செயற்படுவதற்கும் எதிர்வரும் கால கட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. 

"மனிதன் உலகின் பொறுப்பாளியே தவிர உரிமையாளனல்ல" எனும் கோட்பாட்டை உண்மைப் படுத்திய வண்ணம் முழு மொத்த இயற்கையுடனும் கூட்டிணைப்பு பிரவேசிப்பு தொட்டு மொத்த சுற்றுச் சூழலினதும் சம நிலையை பேணக் கூடிய பிரவேசிப்பை ஆரம்பிக்கும் நோக்கில் சுற்றாடல் நேயமிக்க வழி முறைகளின் ஊடாக சுற்றாடல் விடயப் பரப்பின் இலக்குகளை எய்துவது தொடர்பாகவும் இதன் கீழ் முன்னுரிமை வழங்கப்படுகின்றது. 

சமூக பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடலிடையே சம நிலை பேணப்படக் கூடிய வண்ணம் இயற்கை வளங்களின் பயன்பாடு, பேண்தகு முகாமைத்துவத்தின் பங்கேற்பு பிரவேசிப்பு நெறிமுறை பின்பற்றப்படுதல், காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படக் கூடிய தாக்கங்களைக் குறைத்தல், அறிவுடைமை, திறன், சிந்தனா சக்தி மற்றும் மனோ தத்துவ நிலைகளின் வாயிலாக கட்டியெழுப்பப்படுகின்ற ஆரோக்கியமான சன சமூகம் மற்றும் சம நிலை மிக்க சுற்றுச் சூழல் எனும் கோட்பாடுகளை எய்துவதன் வாயிலாக பேண்தகு உயிர்ப் பல்வகைமை உள்ளடக்கிய உலகை எதிர்க்கால இலங்கை குடி மக்களுக்கு கையளிக்கும் பொருட்டு சுற்றாடல் அமைச்சின் ஊடாக இதனை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றேன்.