இலங்கை காலநிலை நிதியம் 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 2008 ஏப்பிறல் 09ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பெனியாகும். இது PV 63781 என்ற பதிவு இலக்கத்தைக் கொண்டுள்ளது. இது சுற்றாடல் அமைச்சின் கீழ் செயற்படுகிறது. இது அரசாங்க மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டுக்கும் ஒரு தொடர் சுற்றாடல் சேவைகளை வழங்குகிறது. 2016ஆம் ஆண்டு வரை வரையறுக்கப்பட்ட இலங்கை கார்பன் நிதிய (தனியார்) கம்பெனி என அழைக்கப்பட்டது. அதன் செயற்பாடு விரிவுபடுத்தப்பட்டு, அதிக பெறுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்றதால் இதன் பெயர் வரையறுக்கப்பட்ட இலங்கை காலநிலை நிதியம் என மாற்றப்பட்டது.
நோக்கு
கார்பன் நடுநிலை மற்றும் காலநிலையை மீட்டெடுக்கும் நீல பசுமை பொருளாதாரம்.
செயற்பணி
கார்பன் குறைந்த மற்றும் காலநிலை மீட்டெடுக்கும் நீல பசுமை அபிவிருத்தி என்பவற்றிற்கு இலங்கை தேசத்திற்கு உதவுதல்.
பணிப்பாளர் சபை
சூழல் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பணிப்பாளர்கள் மத்தியிலிருந்து தலைவரை நியமிப்பார்.
டாக்டர் அனில் ஜயசிங்க | தலைவர் (செயலாளர் சூழல் அமைச்சு) |
டாக்டர் பீ. எம். எஸ். பட்டகொட | பணிப்பாளர் (துறைசார் நிபுணர்) |
திரு. சிறிபால அமரசிங்க | பணிப்பாளர் (தலைவர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை) |
திருமதி வி. இரேசா தில்ஹானி | பணிப்பாளர் (பணிப்பாளர், கணக்காய்வு முகாமைத்துவம், நிதி அமைச்சு) |
உற்பத்தி மற்றும் சேவைகள்
இலங்கை காலநிலை நிதியம் அதன் நிலைபேறான சேவைகளை தனித்தன்மை மிக்க உற்பத்தி கலவைகளுடன் வழங்குகிறது. அது பின்வருவனவற்றையும் பேணுகிறது.
தொடர்பு விபரங்கள்
- வரையறுக்கப்பட்ட இலங்கை காலநிலை நிதிய (தனியார்) கம்பெனி (SLCF),
“சம்பத்பாய”,
இல 82, ராஜமல்வத்த வீதி,
பத்தரமுல்ல. - +94 112 053 065
- +94 112 867 424
- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- www.climatefund.lk