மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) 1980ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆகஸ்ட் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் அது 1988ஆம் ஆண்டும் 2000ஆம் ஆண்டும் திருத்தப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையை (CEA) அமைத்ததன் நோக்கம் சுற்றாடலின் பாதுகாப்பு, முகாமைத்துவம் மற்றும்; மேம்பாட்டுக்கு ஏற்பாடுகளைச் செய்வதோடு, சுற்றாடலின் தரம், ஒழுங்குவிதி, பராமரிப்பு, கட்டுப்பாடு என்பவற்றிற்கும் ஏற்பாடுகளைச் செய்வதாகும். அத்துடன் மாசடைதலைக் கட்டுப்படுத்துதல், குறைத்தல் மற்றும் தடுத்தல் என்பவையுமாகும்.
தொடர்பு விபரங்கள்
- மத்திய சுற்றாடல் அதிகாரசபை,
“பரிசர பியச”,
இல: 104, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல. - +94 112 872 278, +94 112 873 447-9, +94 112 888 999 / Hotline 1981
- +94 112 872 347, +94 112 872 608, +94 112 287 344-7
- www.cea.lk