small gov

இது இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது. அதன் அழகான வெண் மணல் கடற்கரை, அது ஆழமற்ற தெளிவான கடல் நீர் பரப்புக்குச் செல்லுகிறது. இது மாபெரும் இந்து சமுத்திரம் கரை நோக்கி வருகின்ற கரையோரப் பிரதேசமாக கனவுகளின் பொக்கிஷமாகத் திகழ்கிறது. இது வெகு விரைவில் திறக்கப்படும்.

நிலாவெளி கடற் கரை இங்கே நீங்கள் பல வர்ண பவளப் பாறைகளைச் சுற்றி நீந்தி வர முடியும். இது பல நாடா வடிவான அடுக்கு பாளங்களைக் கொண்டுள்ளது - நீல வண்ண இரத்தினங்கள், மஞ்சள் கழிமண், இளஞ்சிவப்பு வஞ்சிர மீன்கள், வெண்புகை, மணல் பாறைகள் மற்றும் நீல வர்ண பொருட்கள் - வர்ணஜாலம் கொண்ட நீருக்கு அடியில் உள்ள உலகைக் கண்டு களிக்கும் உங்கள் கண்களுக்கு வர்ண பவளப் பாறைகளைச் சுற்றி நீந்தி வரும் வண்ண மீன்கள் போன்ற இவையெல்லாம் விருந்தாகும்.

கொழும்பிலிருந்து 275 கி.மீ. தூரத்தில் கிழக்கு கரையோரத்தில் பண்டைய நிலாவெளி கடற் கரையில் அமைந்துள்ளது. இது ஆசியாவில் உள்ள தெளிந்த நீலக் கடலையும் வெண் மணலையும் கொண்ட களங்கமில்லா நேர்த்தியான கடற் கரை என வர்ணிக்கப்படுகின்றது. கிழக்கு கரையோரத்தில் சுற்றுலா மேற்கொள்ளுவதற்கு ஏப்பிறல் முதல் ஒக்ரோபர் வரையிலான காலம் மிகவும் உகந்ததாகும்.

இந்தப் பிரதேசம் புறாத் தீவை நோக்கி இருக்கிறது. தற்பொழு இது புலம்பெயர்ந்து வரும் பறவைகளுக்கு இனப்பெருக்க சரணாலமாகத் திகழ்கிறது. இந்த இடம் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது பிரித்தானியர்கள் குறிவைத்து சுடுவதற்குப் பழகும் இடமாக இருந்தது. புறாத் தீவு உள் நீச்சல் விளையாட்டுக்கு மிகச் சிறந்த இடமாக இருக்கின்றது. திருகோணமலை மரகத குடாவைப் பிரிக்கின்ற சுவாமி பாறை உச்சியில் புகழ்பெற்ற இந்து ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. ஏனைய சுவாரசியமான இடமாக திருகோணமலையின் காலனித்துவ வரலாற்றின் மிஞ்சியுள்ள இடமாகத் திகழும் பிரடறிக் கோட்டை காணப்படுகின்றது.

கிழக்கு கரையில் உள்ள நிலாவெளி கடற்கரை 'இந்தத் தீவின் மறு பக்கமாகும்' இது இன்றும் கூட பழமை வாய்ந்த, மிகத் தூய்மையான மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. இது இலங்கையில் மிகச் சிறந்த மற்றும் ஆசியாவில் முதன்மையான கடற்கரைகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.