small gov

இந்தப் பிரிவின் மூலம் வழங்கப்படுகின்ற சேவைகள்

மாசடைவதைக் கட்டுப்படுத்துவது பற்றிய பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரித்தல்

இரசாயன பொருட்கள் மற்றும் கழிவுகள் பற்றிய தீர்மானம் எடுப்பதற்கு (Basel, Rotterda, Stockholm Minamata) குழு பற்றிய தேசிய இணைப்பாக்க குழுவை நடத்துதல்.

கையொப்பமிடப்பட் சமவாயங்கள், உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் மற்றும் நிதியுதவி அளிக்கும் முகவர் நிலையங்கள்

  • சமவாயங்கள்
    • நாடுகளுக்கு இடையில் நகர்கின்ற அபாயகரமான கழிவுப் பொருட்கள் மற்றும் அவற்றை அகற்றுவதைக் கட்டுப்படுத்தும் பேசல் உடன்படிக்கை (Basel) -www.basel.int
      இது கைத்தொழில் நாடுகளுக்கு இடையில் இந்த அபாயகரமான கழிவுப் பொருட்கள் மற்றும் அவற்றை அகற்றுவது வியக்கத்தக்க அளவில் உயர்வடைந்ததை அடுத்து 1980ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சூழல் ஒழுங்குவிதிகளை கடுமைப்படுத்துவதற்கு இது செய்துகொள்ளப்பட்டது, கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு மலிவான ஒரு வழியைத் தேடிய 'நச்சுப் பொருள் வர்த்தகர்கள்' அபிவிருத்தியடையும் நாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அபாயகரமான கழிவுப் பொருட்களை கப்பலில் ஏற்றி அனுப்பத் தொடங்கினர். இந்தச் செயற்பாடு வெளியானபோது சர்வதேசம் ஆத்திரமடைந்து பேசல் உடன்படிக்கை (Basel) வரைவுபடுத்தி ஏற்றுக் கொள்ள வழியமைத்தது.
    • உறுதியாக சேதன மாசடைதல் (POPs) - www.pops.int
      பற்றிய ஸ்டொக்ஹோம் உடன்படிக்கை. உறுதியாக சேதன மாசடைதல் (POP) பற்றிய ஸ்டொக்ஹோம் உடன்படிக்கை என்பது நீண்ட காலமாக சூழலில் தேங்கியிருக்கின்ற இரசாயன பொருட்களிலிருந்து சூழலையும் மனித சுகாதாரத்தையும் பாதுகாப்பதற்காக செய்து கொள்ளப்பட்டது. இது பரவாலாக விநியோகிக்கப்படுவது பூகோள ரீதியாக மற்றும் மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு கொழுப்பு திசுக்கள் சேர்வதற்கு வழிவகித்திருந்தது.
    • பாதசரசம் பற்றிய மினமாட்டா சமவாயம் - www.mercuryconvention.org
      பாதசரசம் பற்றிய மினமாட்டா சமவாயமானது பாதரசத்தின் பாதகமான தாக்கங்களிலிருந்து மனித ஆரோக்கியத்தையும் சூழலையும் பாதுகாப்பதற்கு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும்.
    • சர்வதேச வர்த்தகத்தில் குறிப்பிட்ட சில அபாயகரமான இரசாயன பொருட்கள் மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றிற்காக முற்கூட்டியே அறிவிக்கப்பட்ட சம்மத நடவடிக்கைமுறை பற்றிய ரொட்டர்டேம் சமவாயம்
      The Rotterdam Convention is a multilateral treaty to promote shared responsibilities in relation to importation of hazardous chemicals.
  • நிதியுதவியளிக்கும் முகவர் நிலையங்கள்
    • உலக சூழல் வசதி (GEF)
    • இலங்கையில் உறுதியாக சேதன மாசடைதல் (POP) பற்றிய ஸ்டொக்ஹோம் உடன்படிக்கையின் கீழ் தேசிய அமுலாக்க திட்ட மீளாய்வு.
    • இலங்கையில் உறுதியாக சேதன மாசடைதல் (POP) பற்றிய பொருட் பதிவை இற்றைப்படுத்துதல்.
    • இலங்கையில் பலவகை குளோரின் மயப்படுத்தப்பட்ட பைபினைல் (PCB) பொருட் பதிவை இற்றைப்படுத்துதல்.
    • இலங்கையில் பெர்புளுரோக்டேன் சல்போனியேட் (PFOS) மற்றும் அதன் ஆரம்ப பொருட்பதிவு.
    • இலங்கையில் டயொக்சின்ஸ் மற்றும் பர்னாஸ் பொருட் பதிவை இற்றைப்படுத்துதல்.
    • பொலிபுரேமினேட் செய்யப்பட்ட டைபனைல் ஈதர்ஸ் (PBDE) மற்றும் ஹெக்சோபுரோமோ பைபனைல் ஆரம்ப பொருட்பதிவு.
  • இந்தப் பிரிவின் பிரதான செயற்பாடுகள்

    • பின்வருவனவற்றிற்கான செயற்பாட்டு மையம்
      • பாஸெல் உடன்படிக்கை
      • மினமாட்டா உடன்படிக்கை
      • ஸ்டொக்ஹோம் உடன்படிக்கை
      • சர்வதேச இரசாயன பொருட்கள் முகாமைத்துவத்திற்கு மூலோபாய அணுகுமுறை (SAICM)
      • ரோட்டர்டேம் உடன்படிக்கை - ரோட்டர்டேம் உடன்படிக்கையின் கீழ் கைத்தொழில் இரசாயன பொருட்களுக்கான மையமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை இருக்கிறது.
    • இரசாயன பொருட்கள் முகாமைத்துவம் பற்றிய கொள்ககைள், மூலோபாயங்கள் மற்றும் செயற்பாட்டு திட்டங்கள் என்பவற்றைத் தயாரித்தல்.
    • பொது மற்றும் அபாயகரமான கழிவுகள் முகாமைத்துவம் பற்றிய பற்றிய கொள்ககைள், மூலோபாயங்கள் மற்றும் செயற்பாட்டு திட்டங்கள் என்பவற்றைத் தயாரித்தல்.
    • இரசாயன பொருட்கள் மற்றும் கழிவு முகாமைத்துவம் பற்றிய தேசிய கருத்திட்டத்தை அமுல்படுத்துதல்.
    • பொது மற்றும் அபாயகரமான கழிவுகள் முகாமைத்துவம், மாசடைதலைக் கட்டுப்படுத்துதல், இரசாயன பொருட்கள் முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களையும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களையும் நடத்துதல்.
    • இரசாயன பொருட்கள், கழிவு முகாமைத்துவம், மாசடைதலைக் கட்டுப்படுத்துதல் என்பவற்றுடன் தொடர்புடைய ஆராய்ச்சி கருத்திட்டங்களை பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் என்பவற்றுடன் கூட்டிணைந்து நடத்துதல்.
    • மாசடைதல் பற்றிய பொதுமக்களின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தல் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட முகவர் நிலையங்களுடன் இணைப்பாக்கம் செய்தல்.
    • டெங்கி தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடத்துதல்.
    • இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ செயற்பாட்டு திட்டத்தை செயற்படுத்துதல்.
    • பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவ செயற்பாட்டு திட்டத்தை செயற்படுத்துதல்.
    • தகுந்த பங்கீடுபாட்டாளர்களுடன் கழிவு குவித்தல் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தை அபிவிருத்தி செய்தல்.

    இந்தப் பிரிவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

    • சர்வதேச ஒலி விழிப்புணர்வூட்டல் தினம் - ஏப்ரல் 29
    • உலக குப்பை மனிதன் தினம் - யூன் 17
    • சர்வதேச பிளாஸ்ரிக் பைகள் அற்ற தினம் - யூலை 3
    • உலக நீர் கணிகாணிப்பு தினம் - செப்டம்பர் 18
    • உணவு இழத்தல் மற்றும் உணவு விரயம் என்பவற்றைக் குறைக்கும் சர்வதேச விழிப்புணர்வூட்டும் தினம் - செப்டம்பர் 29
    • சர்வதேச மின் கழிவு தினம் - ஒக்டோபர் 14
    • சர்வதேச காரீய நச்சூட்டல் தடுப்பு வாரம் - ஒக்டோபர் 25-31

    எமது அணி


    jeewaதிருமதி. ஐ.ஜே.கே. பலுகஸ்வெவ
    பணிப்பாளர்

    jeewanthi ஸ்ரீமதி. ஜீவந்தி ரணசிங்க
    உதவி பணிப்பாளர்